நாகப்பாம்பை வம்புக்கிழுத்த அணில்..!

0 2074

தென் ஆப்பிரிக்காவில் கொடிய விஷப்பாம்புடன் அணில் நடத்திய போராட்டம் குறித்த காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

கலாகடி உயிரியல் பூங்காவில் மஞ்சள் நாகம் ஒன்று சுற்றி வந்தது. அப்போது மரத்தின் மேலிருந்த அணில் ஒன்று பாம்பைக் கண்டதும் வேகமாக வந்து அதனுடன் சண்டையிடத் தொடங்கியது. தனது வாலை ஆயுதமாகப் பயன்படுத்திய அந்த அணில், பாம்பின் கவனத்தைத் திசை திருப்பி அதைத் தாக்கியது.

பின்அந்த அணில் தனது உடலை பாம்பின் கண்ணில் இருந்து மறைக்க அவ்வப்போது மணலை தன்மீது வாரி கொட்டிக் கொண்டது.

அணிலில் இம்சையால் பொறுமையிழந்த பாம்பும் ஒரு கட்டத்தில் வேகமாக தாக்குவதற்கு எத்தனித்தது. ஆனால் பாம்பின் தாக்குதலில் இருந்து அணில் லாவகமாகத் தப்பியது. இந்த காட்சிகளை இணையத்தில் ஏராளமானோர் பார்த்து ரசிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments