கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் : நடிகரின் மகன் கைது

0 2010

கல்லூரி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக சென்னையில் திரைப்பட நடிகர் சூரியகாந்த்தின் மகன் , கைது செய்யப்பட்டு உள்ளார்.

தேனாம்பேட்டையில் மகளிர் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், சூரிய காந்த்தின் 25 வயது மகன் விஜய் ஹரீஸ் மீது புகார் தெரிவித்திருந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரி மாணவியை தனது வீட்டுக்கு வரவழைத்த விஜய் ஹரீஸ்,மாதுளம் பழ ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதுதவிர, கல்லூரி மாணவியை நிர்வாணமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்ததால், விஜய் ஹரீஸ் மீது
பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைதான விஜய் ஹரீஸ், "நாங்களும் நல்லவுங்க தான் " என்ற திரைப்படத்தில் தற்போது நடித்திருக்கிறார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments