மாஸ்டர் படத்துடன் மோதுவதை தவிர்க்க சூரரைப் போற்று ரிலீஸ் தள்ளி வைப்பு ?

0 1245

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்துடன் நேரடியாக மோதுவதை தவிர்க்கும் விதமாக, நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்பட ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று திரைப்படம், வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படமும் அதே தேதியில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சூரரைப் போற்று பட ரிலீஸ் தேதியை, ஏப்ரல் 14 அல்லது மே ஒன்றாம் தேதிக்கு தள்ளிவைக்க அப்படக்குழு யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments