புதிய அப்டேட்டுடன் wifi காலிங் வசதியை கொண்டு வந்துள்ள Realme 3 Pro

0 948

பிரபல செல்போன் நிறுவனமான ரியல்மீ 3 ப்ரோ தனது புதிய அப்டேட்டில் வைஃபை காலிங் ஆதரவை வழங்குகிறது.

பிப்ரவரி மாதத்தின் புதிய அப்டேட் ஆக ஓவர் தி ஏர் (OTA) அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஓவர் தி ஏர் அப்டேட் வசதியில் , வாடிக்கையாளர்கள் அழைப்புகளை (VOWiFi)வைஃபை மூலம் மேற்கொள்ளும் வசதி மற்றும் பிற மாற்றங்களுக்கான புதிய அப்டேட்டுகளுக்கான பதிப்பை வழங்குகிறது.

அதன்படி, RMX1851EX_11.C.03 update ஐ கொண்டு ரியல் மீ 3 ப்ரோ மூலம் இந்தியாவில் ஏர்டெல், ஜியோ ஆகிய சிம் உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள், அழைப்புகளை வைஃபை மூலம் பயன்படுத்தும் வகையில், அப்டேட்டை வழங்குகிறது.

இந்த வைஃபை காலிங் வசதி மூலம் சிம் கார்ட் நெட்வர்க் இல்லாத இடங்களில் பயனாளர்கள் வைஃபை இணைப்பை பெற்றிருந்ததால், அதன் மூலமாக துல்லியமான அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இந்த அப்டேட்டை பயனாளர்கள் பெறவும், அப்டேட்டை சரிபார்க்கவும், மொபைல் Settings ல் > Software Updates பகுதியில் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments