ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் போன் விலை உயர்வு

0 1062

இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பிரிண்ட்டெட் சர்கியூட் போர்டு அசெம்ப்ளி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

அதேபோன்று, ஸ்மார்ட் போன் உபகரணங்களான டிஸ்ப்ளே பேனல், டச் பேனல், மைக்ரோஃபோன், ரிசீவர் ஆகியவற்றின் இறக்குமதி வரியும் 15 சதவீத்டத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 8 ப்ளஸ் மற்றும் ஐபோன் 8 மாடல்களின் விலையை 1.3 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

அதன்படி,  ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் 512 ஜிபி மாடல் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 900 யில் இருந்து ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஐபோன் 11ப்ரோ 512 ஜிபி மாடல் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 900 ல் இருந்து ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஐபோன் 7, ஐபோன் எக்ஸ்.ஆர்., ஐபோன்11 மாடல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால் அதன் விலைகளில் மாற்றம் ஏதும் இல்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments