தமிழர் நாகரிகத்தை சிதைக்க முயற்சி செய்தால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்

0 621

தமிழர்களின் நாகரிகத்தையும், கலாசாரத்தையும் சிதைக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்தால், திமுக சார்பில் தமிழ் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள் அடங்கிய பட்டியலை மறுஆய்வு செய்யப்போவதாக மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் உள்நோக்கத்துடன் அறிவித்து, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களையும், கோயில்களையும் மத்திய தொல்லியல்துறை பட்டியலில் சேர்க்க முயற்சிப்பதாகவும், இதற்கு தமது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியஅமைச்சரின் அறிவிப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments