நாட்டில் அமைதி, ஒற்றுமையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்த பிரதமர் வலியுறுத்தல்

0 944

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் அமைதியும், ஒற்றுமையும் நிலவுவதை உறுதிசெய்ய வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாடாளுமன்றத்தின் நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மந்திரங்கள் எனத் தெரிவித்தார்.

தங்கள் பகுதியில் அமைதியும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலவுவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பாஜகவைச் சேர்ந்த அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதால் அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரி வரும் நிலையில் பிரதமர் இவ்வாறு அறிவுரை கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments