மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை இடம் கிடைக்கும்..?

0 7612

வரும் 26 ஆம் தேதி நடக்க உள்ள மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு 12 முதல் 13 இடங்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

55 இடங்களுக்கு எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 6 ஆம் தேதி துவங்குகிறது. தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 13 கடைசி நாளாகும். 26 ஆம் தேதி மாலையே முடிவுகள் தெரிந்துவிடும்.

இந்த தேர்தலில் பாஜகவுக்கு 12 அல்லது 13 இடங்கள் கிடைத்தபின் மாநிலங்களவையில் அதன் பலம் 94 அல்லது 95 ஆக உயரும். திமுக, அதிமுக தலா 3 இடங்களையும்,ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 இடங்களையும் வெல்ல வாய்ப்புள்ளது.

ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் தலா 2 இடங்களையும், தெலங்கான ராஷ்டிரிய சமிதி ஒரு இடத்தையும் வெல்லும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments