தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வந்த நபர், மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

0 658

மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர், மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், குடும்பத் தகராறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி நதியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சக்திவேலுக்கு காவலாக இரண்டு காவலர்கள் அங்கு பணியிலிருந்தனர். காலை அவர்கள் கண் அயர்ந்த நேரம் பார்த்து, மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து சக்திவேல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்போது தாய், தந்தை இருவரையும் இழந்து இவர்களின் 2 குழந்தைகள் நிராதரவாக நிற்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments