சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. கயவர்கள் 3 பேர் கைது..!

0 8676

சென்னை அடையாறில் 14 வயது சிறுமி காணாமல் போன சம்பவத்தில், அவரைக் காரில் கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அடையாறு இந்திராநகரைச் சேர்ந்த சிவசாமி என்பவர் தனது வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் 9ஆம் தேதி அடையாறு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய போலீசார், சிறுமியின் புகைப்படத்துடன் காணவில்லை என நோட்டீஸ் அடித்து தேடி வந்தனர். பாலவாக்கத்தில் உள்ள சாலையோர தள்ளுவண்டிக் கடையில் சிறுமி வேலை செய்து வருவதைப் பார்த்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அடையாறு போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி சிறுமியை போலீசார் மீட்டு அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். சம்பவத்தன்று நீலாங்கரையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவன் சிறுமியிடம் பலவாறாக ஆசை வார்த்தைகள் கூறி ஆட்டோ ஒன்றில் துரைப்பாக்கத்திற்கு அழைத்துச் சென்றுள்ளான்.

அங்கிருந்து வினோத் என்பவனுக்குச் சொந்தமான காரில் மஹாராஜா என்பவனையும் சேர்த்துக்கொண்டு சிறுமியை அக்கரை கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து 3 பேரும் காரிலேயே அவரை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

பின்னர் அங்கேயே சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் சென்றுள்ளனர். வழி தெரியாமல் சுற்றிய சிறுமி, பாலவாக்கத்தில் உள்ள சாலையோர தள்ளுவண்டிக் கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.

சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின்படி சதீஷ்குமார், வினோத், மகாராஜா ஆகிய மூவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments