சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்குப் புதிய ஆசிரியர்

0 867

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் புதிய ஆசிரியராக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி பொறுப்பேற்றுள்ளார்.

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயால் 1988ஆம் ஆண்டு கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சாம்னா என்கிற மராத்தி மொழி நாளேடு தொடங்கப்பட்டது.

2012ஆம் ஆண்டு அவர் மறையும் வரை சாம்னாவின் ஆசிரியராக இருந்தார். அதன்பின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற அவர் மகன் உத்தவ் தாக்கரே, கடந்த ஆண்டு நவம்பரில் மகாராஷ்டிர முதலமைச்சராகப் பொறுப்பேற்குமுன் ஆசிரியர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில் சாம்னாவின் புதிய ஆசிரியராக உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி பொறுப்பேற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments