வனத்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் கைது

திருவண்ணாமலையில் ரோந்து சென்ற வனத்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் வனத்துறையினர் 8 பேர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த வெங்கடேசன், சிவச்சந்திரன் என்ற இருவர் வனத்துறையினரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர்.
இதையடுத்து அவர்களைத் துரத்திய வனத்துறையினரை வெங்கடேசன் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் வனத்துறையைச் சேர்ந்த சம்பத், பாலாஜி என்ற இருவர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இருசக்கரவாகனம் நிலைதடுமாறி விழுந்த வெங்கடேசன், சிவச்சந்திரன் ஆகியோரை வனத்துறையின் வளைத்துப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Comments