டிரக்கில் இருந்த காய்கனிகளை பதம்பார்த்த யானைகள்

0 2720

தாய்லாந்தில் சாலையை மறித்த யானைகள் வாகனத்தில் இருந்த உணவுப் பொருட்களை பறித்துச் சாப்பிட்டன.

சச்சோயங்சாவோ என்ற இடத்தில் இரு காட்டு யானைகள் சாலையின் நடுவே வந்ததைக் கண்ட வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர். அப்போது ஒரு டிரக்கில் உணவுப் பொருள் இருப்பதைக் கண்ட யானை அதனை முன்புறமாக மறித்து நின்றபடி, டிரக்கின் பின்னால் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிடத் தொடங்கியது.

இறுதியில் காய்கறிகள் வைக்கப்பட்ட மூட்டையை எடுத்து சாலையில் வீசியது. அதற்கு இடைப்பட்ட சில வினாடி நேரத்தில் டிரக்கில் வந்தவர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments