கண்களை கட்டிக் கொண்டு பொருட்களை அடையாளம் காட்டும் மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள், மிட் பிரைன் ஆக்டிவேஷன் என்ற பயிற்சி மூலம் கண்களைக் கட்டிக்கொண்டு பொருட்கள், எண்கள், மனிதர்களை அடையாளம் காட்டி அசத்துகின்றனர்.
பட்டாங்குளத்தில் இயங்கி வரும் துலிப் பன்னாட்டுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு போதிபிரைன் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் இந்த பிரத்யேகப் பயிற்சியை அளிக்கிறது. கண்களைக் கட்டியவாறு எண்களைத் தடவிப் பார்த்து கூறுதல், பொருட்களை தடவிப் பார்த்து அதன் வண்ணங்களைக் கூறுதல், புத்தகங்களில் குறிப்பிட்ட பக்கங்களில் இருக்கும் பாடத்தின் பெயர்களை குறிப்பிடுதல், பள்ளி ஆசிரியர்களை அடையாளம் காட்டுதல் என அசத்துகின்றனர். இந்தப் பயிற்சி மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் என்று கூறும் ஆசிரியர்கள், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் கூறினர்.
Comments