டெல்லி கலவரம் : "அமித்ஷா, உடனடியாக பதவி விலக வேண்டும்" : சோனியா காந்தி

0 1988

டெல்லி கலவர சம்பவங்களுக்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தி உள்ளார்.

நாட்டை உலுக்கிய டெல்லி சம்பவம் குறித்து, விவாதிக்க டெல்லியில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி, கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக
சோனியாகாந்தி, பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டெல்லியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சோனியாகாந்தி கேட்டுக்கொண்டார்.

வெளிநாடு சென்றிருப்பதால், ராகுல்காந்தி, மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனிடையே, சோனியாகாந்தி மலிவான அரசியலில் ஈடுபடுவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments