பட்டுசேலை வியாபாரிகளுக்கு சொந்தமான 16 இடங்களில் வருமானவரி சோதனை

0 793

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 3 பட்டுசேலை உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான 16 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொசப்பாளையம் பகுதியில் ஸ்ரீராம் பட்டுசேலை உற்பத்தி மற்றும் விற்பனையகம் நடத்தி வரும் குணசேகர் என்பவருக்கு சொந்தமான, 3 வீடுகள், 3 திருமண மண்டபங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், அவரது உறவினர்களான சொக்கலிங்கம், ராமலிங்கம் ஆகியோர் நடத்தி வரும் டி.சி.ஆர் பட்டுசேலை கடைகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூர், திருவண்ணாமலை,காஞ்சிபுரம், சென்னை ஆகிய  4 மாவட்டங்களில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குணசேகருக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பட்டுசேலை கடைக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments