சபர்மதி ஆசிரமம் சென்று காந்தியை குறிப்பிடாத டிரம்பை விமர்சித்த நெட்டிசன்கள்

0 718

சபர்மதி ஆசிரமம் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் பார்வையாளர் பதிவேட்டில் மகாத்மா காந்தியைப் பற்றி எதுவும் குறிப்பிடாதது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

இந்தியா வந்துள்ள டிரம்ப் நேற்று தனது மனைவி மெலனியாவுடன் காந்தியின் சபர்மதி ஆசிரமத்து சென்று சுற்றிப் பார்த்தார் இதனைத் தொடர்ந்து பார்வையாளர் பதிவேட்டில் இந்த அற்புதமான பயணத்துக்கு ஏற்பாடு செய்த இனிய நண்பர் பிரதமர் மோடிக்கு நன்றி என்று குறிப்பிட்டபோதும், காந்தியைப் பற்றி எதுவும் எழுதவில்லை.

வழக்கமாக சபர்மதி ஆசிரம் செல்லும் வெளிநாட்டு தலைவர்கள் பார்வையாளர் பதிவேட்டில் காந்தியைப் பற்றி எழுதத் தவறுவதில்லை. 2010-ல் மும்பை மணி பவனுக்கும், 2015-ல் டெல்லி ராஜ்காட்டுக்கும் சென்ற முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா காந்தியை குறிப்பிட்டு எழுதிய நிலையில் இரு தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments