இந்தியாவில் இன்டர்நெட் சேவையை நிறுத்த Hughes நிறுவனம் முடிவு

0 1151

அமெரிக்க சாட்டிலைட் பிராட்பேண்ட் நிறுவனமான ஹூகெஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் (Hughes Network Systems) இந்தியாவில் தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இதனால் 30 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான நிலுவைத் தொகை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வரிசையில் ஹூகெஸ் நிறுவனம் 600 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது.

பாதுகாப்பு, வங்கித் துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்டர்நெட் சேவை அளித்து வரும் இந்த நிறுவனம், திவால் ஆகி விட்டதால் நிலுவைத் தொகையை செலுத்த முடியாது என தொலைத் தொடர்பு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments