பூமி தட்டையானது என்பதை நிரூபிக்க முயற்சித்த அமெரிக்கர் உயிரிழந்தார்

0 15949

பூமி தட்டையானது என நிரூபிக்கப்போவதாக கூறி சொந்தமாக ராக்கெட் செய்து வானில் பறந்த அமெரிக்கர் ஒருவர்,விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் மேட் மைக் ஹியூக்ஸ் என்பவர், பூமி உருண்டை என்கிற கூற்றை மறுத்துவந்துள்ளார். பூமி தட்டையானதுதான் என நிரூபிக்க முயற்சித்த அவர், தான் சொந்தமாக தயாரித்த ராக்கெட் மூலம், சுமார் ஒரு மைல் தூர உயரத்துக்கு விண்ணில் பறந்து சோதனை செய்ய முயற்சித்தார்.

அதன்படி கலிபோர்னியாவில் உள்ள ஓர் இடத்திலிருந்து ராக்கெட்டில் புறப்பட்டார். ஆனால், சீறிக்கொண்டு சென்ற சிறிது நேரத்திலேயே ராக்கெட் வெடித்து கீழே விழுந்ததால் அவர் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments