தங்கத்தால் பிரபலம்: நோயால் பிராப்ளம்..!

0 3650

தங்கம் இருப்பதாக பிரபலமான உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் 269 கிராமங்கள் ஃபுளோரோசிஸ் என்ற ஃபுளோரின் படிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பூமிக்கு கீழே 3 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக தகவல் வெளியானதால் உத்தரப்பிரதேசத்தில் சோன்பத்ரா மாவட்டம் திடீரென பிரபலமானது. உலகிலேயே அதிக தங்கம் இருப்பதால் அடுத்த அமெரிக்காவே இந்தியாதான் என்ற ரீதியில் இணையதளங்களில் விவாதித்து வந்தனர்.

ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று அனைவரையும் ஆஃப் செய்தது GSI எனப்படும் இந்திய புவியியல் ஆய்வு மையம். இந்த நிலையில்தான் சோன்பத்ரா மாவட்டத்தின் அவல நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள 269 கிராமங்களில் உள்ள மக்கள் ஃபுளோரோசிஸ் எனப்படும் ஃபுளோரின் படிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

image

சாதாரணமாக நாம் குடிக்கும் நீரில் ஒன்று புள்ளி 5 மில்லி கிராம் புளோரைடு தான் இருக்க வேண்டும். இது அதிகமானால் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உடலில் தோன்ற தொடங்கும். உடலில் ஒரு கட்டத்தில் புளோரோசிஸ் அதிகம் ஆகிவிட்டால் எலும்புகளும், பற்களும் கடுமையாகப் பாதிக்கப்படும். கால்கள் வளைந்தோ அல்லது மூட்டுக்கள் மடக்க முடியாத நிலையோ ஏற்படலாம். பற்கள் கறைபடிந்து சீக்கிரம் விழுந்தும் விடலாம். தற்போது இந்த நோயால்தான் சோன்பத்ரா மாவட்ட கிராமத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வயதினரையும் பாரபட்சமின்றி தாக்கும் இந்த நோய் நீர் மாசு காரணமாகவோ தொழிற்சாலை கழிவு காரணமாகவோ ஏற்படலாம் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு இப்பகுதி மக்களிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் அளவுக்கு அதிகமாக பாதரசமும், 10 மடங்கு அதிகமாக ஃபுளோரின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தேசிய பசுமை ஆணையம் 3 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் மாநில அரசோ, மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பரிதாபத்திற்குரிய உண்மை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments