கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை

0 813

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், இந்திய விமான நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் ஆசிய நாட்டவர்கள் பட்டியலில் மலேசியா உள்ளிட்ட மேலும் 4 நாடுகளை மத்திய அரசு சேர்த்துள்ளது.

கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளில் இருந்தும், ஹாங்காங்கில் இருந்தும் வருவோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

தற்போது அந்தப் பட்டியலில் நேபாளம், இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா ஆகிய 4 நாடுகளையும் மத்திய அரசு சேர்த்துள்ளது. இதுகுறித்து விமான நிலையங்களுக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் அனுப்பியுள்ள உத்தரவில், வைரஸ் அறிகுறி இல்லையென்றாலும் பரிசோதனை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments