ஆட்டோ ஓட்டுநர் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது

0 198

சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொல்லப்பட்டது தொடர்பாக, போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

பாண்டியன் நகரை சேர்ந்த தேவகுமார் கடந்த 15-ம் தேதி வெளியே சென்ற பிறகு, வீடு திரும்பவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். இந்நிலையில் காரப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே, ஓடையில் அவரது உடல் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கோவர்த்தன் என்பவர் தனது மெக்கானிக் ஷாப்பில், நான்காயிரம் ரூபாய் பணம் மற்று செல்போன் காணமால் போனது தொடர்பாக தேவகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், அதைதொடர்ந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து இரும்பு ராடால் தேவகுமாரை அடித்து கொன்றதும், போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கோவர்த்தன், தவன், விமல் ஆகியோரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அஜித் என்பவனை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments