INDvsNZ முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்த் அணி 183 ரன்கள் முன்னிலை

0 405

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்த் அணி, 183 ரன்கள் முன்னிலை பெற்று ஆல்-அவுட் ஆனது.

வெலிங்டனில் நடைபெற்று வரும் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய 3-ம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

348 ரன்கள் எடுத்திருந்த போது நியுசிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 89 ரன்களையும், டெய்லர் மற்றும் ஜேமிசன் தலா 44 ரன்களையும் குவித்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுக்களையும், அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments