தங்கம் விலை உயர்வு...!

0 1461

தங்கம் விலை இன்று சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்துள்ளது.

கொரானா வைரஸ் பாதிப்பு உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் தங்கம் விலையிலும் எதிரொலித்து வருகிறது. அதன் அடிப்படையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரு சவரன் 32 ஆயிரத்து 408-ஆக இருந்த தங்கம் விலை இன்று 168 ரூபாய் உயர்ந்து 32 ஆயிரத்து 576 ரூபாயாக உயர்ந்துள்ளது ஒரு கிராம் தங்கம் விலை 21 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 72 ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் வெள்ளி விலை நேற்றைவிட இன்று குறைந்துள்ளது. நேற்று கிலோ 52 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த வெள்ளி விலை இன்று 100 ரூபாய் குறைந்து 52 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 52 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments