காரை வழிமறித்து பொறியியல் மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்

0 291

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் காரை வழிமறித்த கும்பல் கத்தியால் குத்தியதில் பொறியியல் மாணவர் உயிரிழந்த நிலையில், அந்த மாணவர் தாக்கப்படும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

லக்னோவில் பிரபல பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் பிரசாந்த் சிங் என்ற மாணவர், தனது நண்பருடன் காரில் வந்த போது 10 முதல் 12 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தாக்கியது. நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்ட மாணவர், அங்கிருந்து தப்பித்து ஓடி அருகிலுள்ள கட்டிடத்தில் புகுந்துள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் ரத்தவெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த மாணவருக்கும், அவரது ஜூனியருக்கும் கைகலப்பு ஏற்பட்ட மறுநாள் கொலை நடந்ததால், இதன் பின்னணியில் அந்த மாணவர் இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments