ATM ல் பணம் எடுத்து தருவது போல் நடித்து கைவரிசை- ஒருவர் கைது

0 980

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவது போல் நடித்து கைவரிசை காட்டி வந்த நபரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க தெரியாதவர்களாக பார்த்து குறி வைக்கும் நபர், அவர்களிடம் ஏடிஎம் கார்டை பெற்று ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டு தெரிந்துள்ளார். பணம் எடுத்து கொடுக்கும் போது அவர்களது ஏடிஎம் கார்டுக்கு பதிலாக போலி கார்டை தந்து ஏமாற்றும் நபர், உண்மையான ஏடிஎம் கார்டில் இருக்கும் பணத்தை சுருட்டி வந்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவது போல் நடித்து கைவரிசை காட்டி வந்த தர்மபுரி மாவட்டம் செட்ரப்பட்டியைச் சேர்ந்த சிவலிங்கத்தை கைது செய்தனர். அவரிடம் 2 லட்சம் ரூபாய் ரொக்கம், போலி ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments