யார் யாரோ குரல் கொடுப்பதை எல்லாம் என் குரல் என்றால் எப்படி? - கருணாஸ் கேள்வி

0 759

யார் யாரோ குரல் கொடுப்பதை எல்லாம் தனது குரல் என்று கூறினால் எப்படி என நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தலைவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் கருணாசை பேச அழைத்த நிகழ்ச்சி தொகுப்பாளர், எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கும் கருணாஸ், கர்ணன் திரைப்படத்தில் கூட பிரச்சனை என குரல் கொடுத்திருப்பதாக கூறி பேச அழைத்தார்.

இதையடுத்து பேச வந்த கருணாஸ், தான் எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பதாகவும், ஆனால் யார் யாரோ கொடுக்கும் குரலை என் குரலென்றால் எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments