ஆக்ராவில் தற்காப்பு பயிற்சியில் மாணவிகள் கின்னஸ் சாதனை..!

0 204

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் தற்காப்பு பயிற்சியில் மாணவர்கள் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

ஆக்ராவில் பிங்க் பெல்ட் எனும் மகளிர் அமைப்பின் சார்பில் 7401 மாணவிகள் கலந்துகொண்டு தற்காப்பு பயிற்சி செய்து புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தி உள்ளனர். பிரபல தற்காப்பு பயிற்சியாளர் அபர்ணா ராஜாவத் தலைமையில் நடைபெற்ற இந்த சாதனை பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திற்காக நிகழ்த்தப்பட்டது.

ஆக்ராவின் ஏகலைவா மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டெல்லி,மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் கலந்துகொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த சாதனை குறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அபர்ணா ராஜாவத் கூறுகையில் பெண்கள் அனைவரும் தங்களை ஆபத்திலிருந்து தற்காத்து கொள்ளவும், அவர்களின் உரிமைகளை காக்கும் நோக்கத்திற்காக மட்டுமே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது என கூறினார். இதற்கு முன்னர் பிரேசில் நாட்டின் "ரியோ டி ஜெனிரோ" மாகாணத்தில் 2010 ஆம் ஆண்டு 2212 பெண்கள் கலந்து கொண்டு தற்காப்பு பயிற்சி மேற்கொண்டதே இதுவரை சாதனையாக இருந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments