புதுச்சேரியில் மதுவை ஒழித்தால் அரசுக்கு பணமில்லை - நாராயணசாமி

0 476

புதுச்சேரிக்கு வரும் கஞ்சா திருவண்ணாமலையில் இருந்து வருவதாகவும், அதை விற்கும் பெண் தாதாவை தனக்கு தெரியும் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அரசு சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான, இரண்டு நாள் கருத்தரங்கு கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, திருவண்ணாமலையில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரியில்  மதுவை ஒழித்தால் அரசுக்கு பணம் இருக்காது எனவே, மதுவை குறைக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments