ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய திட்டங்கள்...

0 1338

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை,  மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்துள்ள தமிழக அரசு, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 5 புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக” அனுசரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதையொட்டி ஆதரவற்ற பெண் குழந்தைகளின் நல்வாழ்விற்காக ஐந்து புதிய திட்டங்களையும் அரசு செயல்படுத்த இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

அரசு இல்லங்களில் வாழும் ஆதரவற்ற குழந்தைகள் 21 வயதை நிறைவு செய்யும்போது, அவர்களது பெயரில் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் வங்கியில் செலுத்தப்படும் என்றார்.

வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று வறிய நிலையில் உள்ள உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம், 1,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக சென்னையில் 15 கோடி ரூபாய் மதிப்பில் ஹஜ் இல்லம் ஒன்று கட்டப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments