ஒரு பொண்ணுங்கோ இரு புள்ளீங்கோ..! அறுந்து போன காதல் ரீல்.!

0 1333

கன்னியாகுமரி அடுத்த குளச்சல் அருகே ஒரு பெண்ணுக்காக இரு இளைஞர்கள் சண்டையிட்டு அடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஒரே நேரத்தில் இருவரை காதலித்த பெண்ணை நம்பி தெருவுக்கு வந்த சேது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி குறிப்பு..

அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டு ஆயா போல கோபமாக செல்லும் இவர் தான் காதல் சேது ராசிபன்..! குளச்சல் பேருந்து நிலைய கட்டிடத்தில் கேர்ள் பிரண்ட் கிப்ட் ஷாப் என்ற பெயரில் குதுகலமாக கடை நடத்திவரும் ராசிபனுக்கும், அடிக்கடி கடைக்கு வந்து கும்மி அடித்த ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

கடை வாடிக்கையாளர்களுக்கு பரிசு பொருட்களை மட்டும் விற்று வந்த ராசிபன், அந்த பெண்ணுக்கு தனது இதயத்தையும் சேர்த்து கிப்டாக கொடுத்திருக்கிறார்..! காதலிக்கு தங்க சங்கிலி தொடங்கி பல விதமான பரிசு பொருட்களை அள்ளிக்கொடுத்ததோடு, காதலி ஆஸ்மியை பல இடங்களுக்கும் அழைத்துச்சென்று பணத்தை தண்ணீராக செலவழித்து காதலை வளர்த்துள்ளார்..!

இந்த நிலையில் அண்மை காலமாக ராசிபனுடன் பேசுவதை தவிர்த்து வந்த அந்த பெண், காதலர் தினத்தன்று கூட ராசிபனை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த ராசிபன், சம்பவத்தன்று மன்மதன் சிம்பு போல அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவனது காதலி , நிஜன் என்ற இளைஞருடன் தனிமையில் நாட்டு நடப்பு குறித்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

தன் இடத்தில் வேறொரு இளைஞர் இருப்பதை கண்ட ராசிபன், ஆஸ்மியிடம் நியாயம் கேட்டு முறைக்க, இரண்டாவது காதலன் என கூறப்படும் நிஜனும், ராசிபனும் வீட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து பயந்து போன அந்த பெண் இது குறித்து குளச்சல் காவல்துறையில் புகார் அளித்தார்.

இரு புள்ளிங்கோக்களையும் , அந்த பெண்ணையும் அழைத்து விசாரணை நடத்திய போது இருவருமே ஆஸ்மியை காதலித்து வருவது தெரியவந்தது. ஆனால் அந்த பெண்ணோ, ராசிபனை தனக்கு தெரியாது என்றும் தன்னை அவன் ஒருதலையாக காதலித்து தொல்லை கொடுப்பதாக தெரிவித்து அதிரவைத்துள்ளார். இதனை கேட்டு விரக்தி அடைந்த ராசிபன் வேகமாக வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் காதலிக்கு அவர் கொடுத்த தங்க சங்கிலியின் ஞாபகம் வர, அதையாவது திருப்பி வாங்கி கொடுங்கள் என்று வாதிடப்பட்டது.

காதலியின் வீட்டில் நடந்த சண்டையில் டியூப் லைட்டை ராசிபன் உடைத்து விட்டதாகவும் அதற்கும் அவர் கொடுத்த தங்கசங்கிலிக்கும் சரியாக போய்விட்டது என சிறுபிள்ளைகளுக்கு பஞ்சாயத்து செய்வது போல அந்த பெண்ணின் தரப்பில் கூறியதோடு, வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக ராசிபன் மீது வழக்கு பதியப்படும் என்று எச்சரித்ததால், காவல்துறையினர் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணும்படி ராசிபனை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் கிளைமேக்சில் வரும் டி.ஆர் பட கதாநாயகன் போல விரக்தியின் விளிம்பிற்கு சென்ற ராசிபன், காவல் நிலையத்திற்கு வெளியே உள்ள குட்டி சுவற்றின் அருகில் தலையில் கைவைத்தபடி சோகத்தில் அமர்ந்தார். பலர் சமரசம் செய்தும் எழுது செல்ல மறுத்து அடம் பிடித்தது இந்த காதல் பறவை .!

கண்களில் நுழைந்து இதயம் புகுவதுதான் காதல்... கைகளில் உள்ள பரிசு பொருளை பார்த்து காதல் வந்தால், அதனை விட பெரிய பரிசு கிடைத்தால் காதலி அந்த நபரை தேடிச்சென்று விடுவார் என்பதற்கு இந்த காதல் கலாட்டாவே சான்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments