இரண்டே மாதம் இரண்டு இரட்டைசதம்..அசத்திய டிராவிட் மகன்..!

0 1101

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட்டின்  மகன் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தூண் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் முன்னாள் வீரர் டிராவிட். தந்தையின் ஆட்டத்திற்கு சற்றும் சளைக்காமல் தூணாக நின்று தனது அணியையும் வெற்றி பெற வைத்துள்ளார் டிராவிட்டின் மகன் அமித் டிராவிட்.

பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இந்த குட்டி டிராவிட். தனது அணியான மல்லியா சர்வதேச பள்ளிக்கும், ஸ்ரீகுமரா பள்ளிக்கும் நடந்த ஆட்டத்தில் 33 பவுண்டரிகளுடன் 204 ரன்கள் விளாசினார்.

மேலும் பந்து வீசி இரண்டு விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளார். எதிரணியான ஸ்ரீகுமாரா பள்ளி 110 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தனது அபாரமான ஆட்டம் மூலம் தூணாக நின்று விளையாடி தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் அமித்.

இதேபோல கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 வயதினருக்கு நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் இரட்டை சதமடித்தது குறிப்பிடத்தக்கது. தனது தந்தையை போலவே பொறுப்பான ஆட்டம் மூலம் அணியை வெற்றிபெற வைத்த அமித் டிராவிட்டை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments