அமெரிக்க அதிபரின் வருகையையொட்டி அகமதாபாத் குடிசைவாசிகளுக்கு நோட்டீஸ்

0 868

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின், அகமதாபாத் வருகையையொட்டி, அங்குள்ள மோடேரா (Motera) பகுதியில் வாழும் குடிசைவாசிகள், உடனடியாக, அங்கிருந்து வெளியேறுமாறு, மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.

இம்மாதம் 24ஆம் தேதி முற்பகலில், வாஷிங்டனில் இருந்து, நேரடியாக அகமதாபாத் வரும் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து, சாலை மார்க்கமாக, மகாத்மா காந்தியடிகளின் சமர்பதி ஆசிரமத்திற்கு செல்கிறார்.

அங்கிருந்து, மோடேரா (Motera) பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு டிரம்ப் பயணமாகிறார். அங்கு அவருக்கு, "நமஸ்தே டிரம்ப்" என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளிக்கிறார். இந்நிலையில், டிரம்ப் வருகையையொட்டி, மோடேரா(Motera) பகுதி குடிசைவாசிகளை, 7 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments