போலீஸ் போல நடித்து பணம் வசூல்..! நிஜ போலீசாரிடமிருந்து தப்பிக்கும் போது லாரி மோதி பலி

0 8405

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, போலீஸ் போல நடித்து வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்தியவர், நிஜ போலீசாரிடமிருந்து தப்பிக்கும் போது விபத்தில் உயிரிழந்தார்.

கள்ளிமேட்டை சேர்ந்த அஜித்குமார் என்பவர், எஸ்.ஐ போல போலீஸ் சீருடை அணிந்து, வேலம்பாளையம் என்ற இடத்தில் வாகன ஓட்டிகளை மறித்து, சோதனை எனும் பெயரில் பணம் வசூலித்துள்ளார்.

இது தொடர்பாக வந்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு நிஜ போலீசார் சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க தனது பைக்கில் அதிவேகமாக அஜித்குமார் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த லாரியின் மீது பைக் மோதியதில் அஜித்குமார் உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்த போது பதிவான சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments