பிரிட்டனில் பிரெக்சிட் ஆதரவு அமைப்பு தேர்தல் விதிமீறல்

0 534

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த பொதுவாக்கெடுப்பின்போது விதிகளை மீறியதற்காக Leave.EU அமைப்புக்கு இந்திய மதிப்பில் 64 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2016ஜூன் 23ஆம் நாள் ஆன்லைனில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 52விழுக்காட்டினர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்றும், 48 விழுக்காட்டினர் வெளியேறக் கூடாது என்றும் கருத்துத் தெரிவித்தனர். பெரும்பான்மையினரின் முடிவுக்கிணங்க அடுத்த ஆண்டு மார்ச்  30ஆம் தேதி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற ஆதரவு திரட்டிய Leave.EU அமைப்பு அனுமதிக்கப்பட்டதைவிட அதிகத் தொகை செலவிட்டதாகக் குற்றஞ்சாட்டது. அந்த அமைப்பின் தலைமைச் செயலர் லிஸ் பில்னீயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அது உண்மை என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து Leave.EU அமைப்புக்கு இந்திய மதிப்பில் 64 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments