மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமைக்காது - JP நட்டா திட்டவட்டம்

0 632

மகாராஷ்டிராவில் எந்த அரசியல் கட்சியுடனும் பாஜக அடுத்து கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், அடுத்த தேர்தல்களில் பாஜக தனித்தும், பிற கட்சிகள் ஓரணியிலும் போட்டியிடும் என்றார். அடுத்த தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக மாபெரும் வெற்றி பெறும் என்று கூறிய நட்டா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி நம்பகத்தகாத, இயற்கைக்கு மாறான கூட்டணி என்றும், மராத்திய பேரரசர் சிவாஜியையும், வீர சவார்க்கரையும் அவமதிக்கும் சம்பவங்கள் அதிகரித்தபோதிலும், அதை காணாதது போல முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

சித்தாந்த விவகாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப பாஜக  நிலைப்பாட்டை மாற்றியதில்லை எனவும், திருப்திபடுத்தும் கொள்கையில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை எனவும் நட்டா கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments