நள்ளிரவில் கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக் கொலை

0 669

கோவை மாவட்டம் சூலூர் அருகே கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்ற மாணவர், கோவில்பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.

நேற்றிரவு தனது வீட்டிற்கு அருகே சென்றுக் கொண்டிருந்த போது அங்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேர் தமிழ்செல்வனை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளனர்.

உயிருக்கு போராடிய படி செல்போன் மூலம் பக்கத்து வீட்டாரை அழைத்து நடந்தவற்றை கூறிய தமிழ்செல்வம், அங்கிருந்து நடந்துச் சென்று தனது வீட்டு வாசலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்கான காரணம் குறித்து சூலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments