தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

0 771

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன் தயாள் உபாத்யாயாவின் 63 அடி உருவச்சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடியை, உத்தரபிரதேச ஆளுநர் அனந்தீபென் பாட்டில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.

முதலாவதாக ஜங்கம்வாடி மடத்தில் வழிபாடு செய்த பிரதமர், தொடர்ந்து ஸ்ரீ ஜகத்குரு விஷ்வராதயா குருகுலத்தில் நடைபெற்று வரும் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர் இளையதலைமுறையினருக்கு பலனளிக்கும் வகையில், சமஸ்கிருதம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளையும் விரிவுபடுத்த அரசு முயன்று வருவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து பதாவோ பகுதியில் நிறுவப்பட்டுள்ள பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன் தயாள் உபாத்யாயாவின் 63 அடி உருவச்சிலையை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments