தங்கம் விலை உயர்வு...!

0 669

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 31 ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனையாகி வரும் நிலையில், கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று 3 ஆயிரத்து 889 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று 35 ருபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 924 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 31 ஆயிரத்து 112 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று 280 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 392 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 200 ரூபாய் உயர்ந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments