டிப்டாப் உடையணிந்து வந்து மூதாட்டியிடம் வழிபறி

0 521

சென்னை கொளத்தூர் பகுதியில் மளிகைக்கடையில் நின்றுகொண்டிருந்த மூதாட்டியிடம், டிப்டாப் உடையுடன் வந்த நபர் வழிபறியில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொளத்தூர் பகுதியில் வீட்டு வேலைகள் செய்து வரும் மூதாட்டி லட்சுமி, விநாயகபுரம் பகுதியில் உள்ள மளிகைக்கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு டிப்டாப் உடையணிந்து பைக்கில் வந்த நபர், சுற்றும் முற்றும் நோட்டமிட்டு மூதாட்டி அணிந்திருந்த செயினை பறித்துள்ளான்.

செயின் அறுபடாததால், மூதாட்டியை படிக்கட்டில் இருந்து தரதரவென இழுத்துச் சென்று செயினை பறித்துக்கொண்டு தப்பியுள்ளான். சிசிடிவி காட்சிகளை வைத்து வழிபறி செய்தவனை போலீசார் தேடி வரும் நிலையில், மூதாட்டி அணிந்திருந்தது செயின் கவரிங் என தெரியவந்துள்ளது.

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments