14 கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர்களை பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

0 377

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 14 நேரடி கொள்முதல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 14 கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர்களை பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

இம்மாவட்டத்தில்  463 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மேலப்பனையூர், சேரன்குளம், ஆதிரெங்கம், பிச்சன்கோட்டகம், சாத்தனூர், புலவர்நத்தம், ஆண்டங்கோவில், சித்தன்வாழூர், நன்னிலம், சேங்கனூர், குவளைக்கால், புள்ளவராயன்குடிகாடு, ஆகிய 14 நேரடி கொள்முதல்  நிலையங்களை கடந்த 12 மற்றும் 13ம் தேதிகளில் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் ஆய்வு செய்ததில் நெல் மூட்டைகளில் தரவேறுபாடு, எடை கூடுதல் மற்றும் குறைவு, தையல் குறைப்பாடு போன்ற காரணங்களால் இந்த கொள்முதல் நிலையத்திலுள்ள 14 பட்டியல் எழுத்தர்களையும் பணிநீக்கம் செய்வதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments