நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கவில்லை - மத்திய அரசு

0 287

நாட்டில் கொரோனா தொற்று நிலவரத்தை பிரதமர் அலுவலகம் நேரிட்டு கண்காணித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரானா குறித்து, மாநில சுகாதாரச் செயலர்களுடன் காணொலி காட்சி மூலம் விவாதித்த பின், மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் பிரீத்தி சுதன் இதைத் தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் கொரானா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றாலும், நிலைமையை அரசு மிகவும் உன்னிப்புடன் கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளார். இதற்காக சிறப்பு அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.

கேரளாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட 3 மாணவிகளில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியதை சுட்டிக்காட்டிய அவர் 15 ஆயிரத்து 991 பேர் சமுதாய கண்காணிப்பில் இருப்பதாக கூறினார். இவர்களில் 497 பேருக்கு அறிகுறிகள் இருக்கிறதா என்ற கண்காணிப்பும், 41 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரீத்தி சுதன் தெரிவித்தார்.

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments