இத்துபோன ஜி.பி.முத்துவின் செத்துப்போன காதல்..! வேலண்டைன் வேதனைகள்

0 2262

உலகமெங்கும் காதலர்தினம் களைகட்டிய நிலையில் காதலர் ஜங்சனான டிக்டாக்கில் காதல் என்ற பெயரில் அரங்கேறிய அட்டகாசங்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

காதலை சொல்வதற்கு உருவாக்கப்பட்ட இந்த காதலர் தினத்தில், காதலர் ஜங்சனான டிக்டாக்கில் யூனிபார்ம் போட்ட பள்ளி கூட பாய்ஸ் முதல் யூத் என சுற்றும் டை அடித்த ரோமியோக்கள் வரை செய்த அட்ராசிட்டிஸ் கொஞ்சம் நஞ்சமல்ல...

பள்ளிக்கூட பசங்க தான் வயசு கோளாறில் காதல்ன்னு பொறுப்பில்லாமல் சுத்துரானுங்கன்னு பார்த்தால், வயதான பீஸ்சான ஜி.பி. முத்து செய்த காதல் அலப்பறைகள் கொஞ்சம் ஓவர் தான்...!

ஊரே சுற்றி வளைத்து வசைபாடியதால் விரக்தியில் புலம்பிய ஜி.பி.முத்து மீண்டும் ஜோடி தேடி ரவுசு பேபி சூர்யாவுக்கு காதல் தூதுவிட்டார்

இதையடுத்து தேவையில்லாத ஆணி என்று டிக்டாக்கில் இருந்து தூக்கி எறியப்பட்ட ரவுசு பேபி சூர்யாவும், ஜி.பி.முத்துவும் மீண்டும் தங்கள் காதல் திருவிளையாடலை தொடங்கினர்.

முன்பு ரவுசு பேபி சூர்யாவுடன் ஊர் ஊராக சுற்றி காதலை வளர்த்து வந்த இந்த டிக்டாக் அம்பாசிடர் ஜி.பி.முத்து தற்போது மீண்டும் காதல் டூயட் பாட தொடங்கி உள்ளார்

ஏற்கனவே இவர்களது காதல் சேட்டைகளை டிக்டாக்கில் கிழித்து தொங்கவிட்ட நிலையில் மீண்டும் காதல் மின்சாரம் பாய்ச்ச ஆரம்பித்துள்ளார் டிக் டாக் தில்லாலங்கடி ஜி.பி.முத்து

டிக்டாக்கிற்கு குட்பை சொன்ன ரவுசு பேபி சூர்யாவும் காதலை பகிர ஜி.பி.முத்துவுடன் களை கட்டியது டிக்டாக் கச்சேரி

இந்த காதல் விளையாட்டுக்கு டிக்டாக் நலம் விரும்பிகள் வார்த்தைகளால் நலுங்கு வைக்க ஜி.பி முத்து கதறும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ஜி.பி.முத்துவுடனான நாடக காதலை தனது ஸ்டைலில் பிரேக் அப் செய்து கொண்டார் சூரியா..!

இத்துபோனவர்கள் எல்லாம் டிக்டாக்கில் காதல் சடுகுடு ஆடிக்கொண்டிருக்க , சற்றும் கெத்து குறையாமல் புல்வாமா தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தினர் இந்த திருநங்கை சகோதரிகள்..!

நாட்டிற்குள் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் டிக் டாக் என்ற மனநல காப்பகத்தில் என்ன நடக்கிறது என்பதை கூட அறியாமல், இத்தகைய நபர்களுடன் பயணித்தால்..., ஒரு நாள் சாமனியனின் சட்டை கிழியும் நிலை கூட ஏற்படலாம் என்பதே காதல் மயக்கத்தில் சுற்றும் இந்த டிக்டால் வாசிகள் நமக்கு சொல்லும் எச்சரிக்கை சேதி..!

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments