டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

0 175

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குரூப் 2ஏ தேர்வில் 9 லட்சம் ரூபாய் கொடுத்து வெற்றிப்பெற்றதாக வேலூர் மாவட்ட வணிக வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய திருவண்ணாமலை வினோத்குமார் என்பவரும், குரூப்4 தேர்வில் தலா 7 லட்சம் ரூபாய் கொடுத்து வெற்றிப்பெற்ற கடலூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மூவரும் ஜாமீன் வழங்கக்கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இவை விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, மூன்று மனுக்களையும், நீதிபதி தள்ளுபடி செய்தார். 

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments