டெல்லி - ஹாங்காங் இடையிலான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்ய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு

0 266

ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களை தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் டெல்லி - ஹாங்காங் இடையிலான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்ய உள்ளது.

கொரானா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து நாள்தோறும் ஹாங்காங்குக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்களை ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் இம்மாத தொடக்கத்தில் ரத்து செய்தன.

ஆனால் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தொடர்ந்து விமானங்களை இயக்கி வந்ததால், அந்நிறுவன ஊழியர்கள் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 16ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை டெல்லியில் இருந்து ஹாங்காங்குக்கு நாள்தோறும் இயக்கப்படும் விமானங்களை தற்காலிகமாக ரத்து செய்ய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து சீனா மற்றும் ஹாங்காங்குக்கு விமான சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments