டிஎன்பிஎஸ்சி முறைகேடு... இடைத்தரகரின் கூட்டாளிகள் சரண்

0 221

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் முறைகேடு வழக்கில் கைதான இடைத்தரகர் ஜெயக்குமாரின், இரண்டு கூட்டாளிகள் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 

டிஎன்பிஎஸ் குரூப் தேர்வுகள் முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய நபரான இடைத்தரகர் ஜெயக்குமார் கடந்த 7ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை சிபிசிஐடி போலீசார் 7 நாள் காவலில் எடுத்து, முறைகேடு நடந்த கீழக்கரை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

அவரிடம் இருந்து ரூபாய் 12 லட்சம் பணம் மற்றும் 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது போலீஸ் காவல் முடிந்ததால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே இந்த முறைகேட்டில் ஜெயக்குமாரின் கூட்டாளியாக செயல்பட்ட திருச்சி துறையூரைச் சேர்ந்த தமிழாசிரியர் செல்வேந்திரன் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவர் வினாக்களுக்கு விடைகள் தயார் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இதேபோல் மற்றொரு கூட்டாளியான சென்னை கொளத்தூரை சேர்ந்த பிரபாகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருவரும் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் வரும் திங்கட்கிழமையன்று காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments