கொரோனா தொற்று அமெரிக்காவில் பெரிய அளவில் பரவ வாய்ப்பு... நோய் தடுப்பு இயக்குநர் அச்சம்

0 418

சீனாவின் ஹூபேய் மாகாணத்தை ஒட்டுமொத்தமாக புரட்டி போட்டுள்ள கொரோனா வைரஸ் அமெரிக்கா முழுவதும் பரவக்கூடும் என்பதால் அதற்கான தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் இந்த ஆண்டைக் கடந்தும் தனது கைவரிசையை காட்டும் என கூறியுள்ள அமெரிக்க நோய் தடுப்பு மைய இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்டு, அமெரிக்காவில் அதன் பரவலை குறைப்பதுடன், அதற்கான கொரானா தடுப்பூசி, மருந்துகள் உள்ளிட்டவற்றை உருவாக்கும் திட்டம் உள்ளதாகவும்  கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இதுவரை 15 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா தொற்றை தவிர்ப்பதற்காக சீனாவுக்கு சென்று வந்தவர்கள் நுழைய தடை, ஊகானில் தங்கிய அமெரிக்கர்கள் நாடு திரும்ப தடை உள்ளிட்ட பல்வேறு பயணத் தடைகளை அமெரிக்க அரசு விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments