டாஸ்மாக் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய்..!

0 412

மாநிலத்தின் வருவாய் அதிகரிப்பதற்கேற்ப, வளர்ச்சிப் பணிகளுக்காக வாங்கக்கூடிய கடன்களின் அளவு அதிகரிப்பதும் வழக்கமான ஒன்றுதான் என்று நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் மொத்த கடன் நான்கரை லட்சம் கோடி என்பது நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

டாஸ்மாக் மூலம் இந்த ஆண்டு 30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கிருஷ்ணன் தெரிவித்தார்.

விரலுக்கு ஏற்ற வீக்கம் போல் மிகத் துல்லியமாக நன்றாக கணக்கிட்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் உட்பட அனைத்திற்கும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கிருஷ்ணன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments