தமது முதல் காதல் எது..? பகிர்ந்து கொண்ட சச்சின்

0 278

காதலர் தினமான இன்று தமது முதல் காதல் எது என்பது குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரும், அவரது மனைவி அஞ்சலியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆதலால் சச்சின் வெளியிட்ட வீடியோவில் மனைவி அஞ்சலி குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கிரிக்கெட் விளையாட்டு மீதுதான் தனக்கு முதல் காதல் என்று பொருட்படும் வகையில் வலை பயிற்சியில் தாம் ஈடுபட்டிருக்கும் காட்சியை கொண்ட சச்சின் பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும், சச்சினை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

My First Love! ? pic.twitter.com/KsYEYyLaxD

— Sachin Tendulkar (@sachin_rt) February 14, 2020 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments