பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் தப்பியோட்டம்

0 606

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவிருந்த அரசு மருத்துவர் காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நெல்லூர் மாவட்டம் உதயகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தவன் ரவீந்திரநாத் தாகூர். இவன் அங்குள்ள செவிலியர்கள் இருவருக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி,வியாழக்கிழமை செவிலியர்களின் உறவினர்கள் அவனை அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கவிருந்தனர். அங்கு போலீசாரின் கவனத்தை திசை திருப்பி அவன் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மருத்துவர் ரவீந்திரநாத்தைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments